அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகும் ஜெப் பெசோசுக்கும், புதிய சிஇஓ ஆன்டி ஜாஸிக்கும் கூகுள் சிஇஓ வாழ்த்து

0 1732

அமேசான் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஜெப் பெசோசுக்கும், புதிய சிஇஓ ஆக பொறுப்பேற்க உள்ள ஆன்டி ஜாஸிக்கும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சிஇஓ பதவியில் இருந்து விலகி, நிர்வாக தலைவராகவும், அறக்கட்டளை பணிகளிலும் ஈடுபட உள்ளதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார். அவரது இடத்திற்கு அமேசான் வெப் சர்வீசஸ் தலைவராக இருக்கும் ஆன்டி ஜாஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பேருக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, ஜெப் பெசோசின் அறக்கட்டளை பணிகள் வெல்லட்டும் என வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆன்டி ஜாஸிக்கு மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments