நாட்டில் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கி கூட இல்லை - மத்திய அரசு

0 624

நாட்டில் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கி கூட இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு ரத்த வங்கி இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே , அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கி கூட இல்லை  என்றும், நாடு முழுவதும் 3ஆயிரத்து 321 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments