உறவினர் வீட்டில் தங்கிய சிறுமி... கயவனால் நடந்த கொடூரம்!

ஈரோடு அருகே மூன்று பெண்களைத் திருமணம் செய்தும், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை பகுதியைச் சேர்ந்தவன் முருகேசன். இவனுக்கு ஏற்கனவேல சாந்தி, கெளவுசல்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். சாந்தி முருகேசனை விட்டுச் சென்றவுடன் கெளசல்யாவுடன் வாழ்ந்து வந்தான். கெளசல்யாவின் சகோதரியான சுந்தரியின் கணவர் 2008 - ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு விட்டார். சுந்தரி தனது சகோதரியான கௌசல்யா வீட்டுக்கு வந்த தங்கியிருந்தார்.
அப்போது, சகோதரியின் கணவரான முருகேசனுடன் சுந்தரிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. கெளசல்யாவும் கண்டு கொள்ளவில்லை. இதனால், முருகேசன், கெளசல்யா மற்றும் சுந்தரி மற்றும் சுந்தரியின் மகள் என்று எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். பெருந்துறை பகுதியில் பழைய பேப்பர் மற்றும் பாட்டில்களை பொறுக்கி விற்று மூன்று பேரும் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில், கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுந்தரியின் 13 வயது மகளும் தாயுடன் சேர்ந்து பேப்பர் பொறுக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
கடந்த தீபாவளி தினத்தில் சுந்தரியும் கௌசல்யாவும் வெளியே சென்றுவிட சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, முருகேசன் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதை வெளியே சொன்னால் தாய் சுந்தரியையும், உன்னையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். பயம் காரணமாக, சிறுமி இந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சிறுமியின் பயத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் எல்லாம் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இந்த சூழலில், சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்ட சுந்தரி சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமி முருகேசன் தன்னை பலாத்காரம் செய்தது குறித்து கண்ணீருடன் கூறியுள்ளார். சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, பெருந்துறை காவல் நிலையத்துக்கு சென்ற கௌசல்யா, சுந்தரி முருகேசன் மீது புகாரளித்தனர். பெருந்துறை காவல்துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments