தென் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1059
தென் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தென் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு வட மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும், வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments