அரிவாளுடன் அலப்பறை துபாய் ரிட்டன் பகிரங்க மன்னிப்பு…! போய் புள்ள குட்டிகள படிக்க வைப்பா..!

0 54583
அரிவாளுடன் அலப்பறை துபாய் ரிட்டன் பகிரங்க மன்னிப்பு…! போய் புள்ள குட்டிகள படிக்க வைப்பா..!

கொள்ளையர்களை பிடித்து துபாய் போல கைகால்களை வெட்ட வேண்டும் என்று கையில் அரிவாளுடன் முக நூலில் வீடியோ பதிவிட்ட கொத்தனார் ஒருவர் போலீசுக்கு பயந்து, பொதுமன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். கையில் அரிவாள் பிடித்து அலப்பறை செய்தவர் ஊரை காலி செய்த பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சினிமா ஒன்றில் துபாய் ரிட்டனான வடிவேலு, துபாயையும், நம்ம ஊரையும் ஒப்பிட்டு உதார் விடும் காட்சிகள் காமெடியானவை..!

இதே போல துபாய் மற்றும் பஹ்ரைனுக்கு கட்டிட வேலைக்கு சென்று திரும்பிய நிர்மல், அந்த நாட்டு சட்டதிட்டங்கள் குறித்து நம்ம ஊருடன் ஒப்பிட்டு பேசி வாயால் வம்பிழுத்து வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்த நிர்மல், முக நூலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் கத்தியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சீர்காழியில் இருவரை கொலை செய்து கொள்ளையடித்தவர்களின் கைகளை எப்படி வெட்ட வேண்டும் என்று செய்முறை விளக்கம் செய்து காட்டினார், தான் தங்கி வேலைப்பார்த்த பஹ்ரைனில் கொள்ளையர்களுக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்கப்படும் என்று உதார் விட்டார்

நிர்மல் கையில் கத்தியுடன் வெளியிட்ட வீடியோ குறித்து காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியதால், அஞ்சி நடுங்கியவர் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இறுதியாக தான் கத்தியுடன் புத்தி சொன்னதை தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்ட நிர்மல், தமிழகத்தை விட்டு வெளியேறி கேரளாவுக்கு செல்லப்போவதாக கூறி வீடியோ வெளியிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்

இதற்கிடையே கத்தியுடன் வீடியோ பதிவிட்ட நிர்மல் வீட்டில் இருந்து தலைமறைவானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

கையில் ஒரு ஸ்மார்ட் போன் கிடைத்து விட்டால் போதும் நாட்டாமை ரேஞ்சிக்கு ஊர் நியாயம் பேசுவது. வம்பு வந்ததும், பேசியதெல்லாம் தப்பு என்று பல்டி அடிப்பதும் இத்தகைய செல்பி சேட்டை புள்ளைகளின் வாடிக்கை..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments