லஞ்சத்தில் குளிக்கும் அதிகாரிகளை குறிவைத்து 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கர்நாடகாவில் லஞ்ச புகாரை அடுத்து அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 30 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.
கர்நாடகாவில் லஞ்ச புகாரை அடுத்து அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 30 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.
அந்த மாநில அதிகாரிகள் 7 பேர் மீது வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
பெங்களூரு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் சிக்கி உள்ளது.
தார்வாடு நகரில் செயற்பொறியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 400 கிராம் தங்கம் மற்றும் 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments