கொரோனா வார்டில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை- உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு

0 892
கொரோனா வார்டில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை- உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு

த்தரகாண்டில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா 11 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.

டேராடூனில் 108 அவசர சேவைக்காக 132 ஆம்புலன்ஸ் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்த பின் பேசிய அவர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையை சேர்ந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

10 மாதங்களுக்கு முன் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை 216 ஆக இருந்த நிலையல், தற்போது 863 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments