தமிழக அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான கடன் தொகை உயர்வு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 7701
தமிழக அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான கடன் தொகை உயர்வு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

ரசு அதிகாரிகளுக்கு வீடு கட்டுவதற்கு கடனாக வழங்கும் முன்பணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

வீடு கட்டவோ, கட்டிய வீட்டை வாங்கவோ, அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவோ ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முன்பணத்தொகை 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதர மாநில அரசு ஊழியர்களுக்கான கடன் தொகை 15 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபயாக அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது இந்த முன்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

8 ஆண்டுகளில் பணவீக்கம் 60 சதவீதம் உயர்ந்துள்ளதை கணக்கிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments