தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 4322
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு வட மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும், 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரத்தில் பனி மூட்டம் நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments