மியான்மர் நாட்டுக்கு அவசிய தேவை இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம்; இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மியான்மர் நாட்டுக்கு அவசிய தேவை இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம்; இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
மியான்மார் நாட்டுக்கு அவசிய தேவை இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், மியான்மரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அந்நாட்டுக்கு செல்லுகையில் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
தேவைப்பாட்டால் மியான்மரில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற 4 ஆம் தேதி யான்கூன்-டெல்லி இடையே இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் 11 ஆம் தேதி இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments