நாட்டின் பாதுகாப்பிற்காக அன்னிய நாடுகளை நம்பி இருக்க முடியாது- அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பிற்காக அன்னிய நாடுகளை நம்பி இருக்க முடியாது- அமைச்சர் ராஜ்நாத் சிங்
நாட்டின் பாதுகாப்பில் இனியும் பிற நாடுகளை சார்ந்திருக்க முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தில் இலகு ரக விமான உற்பத்தியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை கூறினார்.
தேஜஸ் விமானத்தை வாங்க பல நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அதற்கான ஒப்பந்தம் கிடைக்குமென அவர் கூறினார். அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி 1.75 லட்சம் கோடி ரூபாய்களை எட்டுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேஜஸ் விமானம், ஏனைய பன்னாட்டு விமானங்களை விட பல மடங்கு மேம்பட்டது என ராஜ்நாத் சிங் கூறினார்.
Comments