"தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படாமல் முன் வாருங்கள்"-ராதாகிருஷ்ணன் அழைப்பு

0 1058
தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படாமல் முன் வாருங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படாமல் முன் வாருங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பலர் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையாகத்தான் உள்ளது என்றார்.

எல்லோருக்கும் முன் உதாரணமாக சுகாதாரப்பணியாளர்கள் இருக்க வேண்டும் என்ற அவர், கிராமங்களில் பணியாற்றும் நர்சுகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடம் அதிக பயம் உள்ளது என்றார். ஒவ்வொரு மாவட்டந்தோறும் விழிப்புணர்வு நடத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments