காதல் போட்டியில் சக போட்டி மாணவனை தாக்கிய இளைஞன்..! 3 பேரை கைது செய்தது காவல் துறை

0 2221
காதல் போட்டியில் சக போட்டி மாணவனை தாக்கிய இளைஞன்..! 3 பேரை கைது செய்தது காவல் துறை

புதுச்சேரியில் காதல் போட்டியில் பள்ளி மாணவனைத் தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, சக மாணவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே மாணவியை அவர் வசிக்கும் தெருவைச் சேர்ந்த திலீப்குமார் என்பவனும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், மாணவியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்ற பள்ளி மாணவனை நண்பர்களுடன் சேர்ந்து திலீப்குமார் தாக்கியுள்ளான்.

மாணவர் அணிந்திருந்த தங்க, வெள்ளி அணிகலன்களையும் பிடுங்கிக் கொண்டு துரத்திவிட்டதாகக் கூறப்படும் நிலையில், திலீப்குமாரை அவனது நண்பர்கள் இருவருடன் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments