ஜனவரியில் பெய்த கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்யத் தமிழகம் வருகிறது மத்தியக் குழு

0 673
தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் வருகிற 4-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் வருகிற 4-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

ஆறு பேர் கொண்ட மத்தியக்குழு இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் மூன்று பேர் கொண்ட ஒரு குழு 4-ம் தேதி விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், 5-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கையிலும் ஆய்வு செய்கிறது.

இதேபோல் டெல்லியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் மூன்று பேர் கொண்ட மற்றொரு குழு 4-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், 5-ம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments