பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; போலீசாருக்கு சிறப்பு டிஜிபி அறிவுறுத்தல்

பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; போலீசாருக்கு சிறப்பு டிஜிபி அறிவுறுத்தல்
பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், தூத்துக்குடி ஏரல் சிறப்பு காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தகாத வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டதாக தகவல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை தொடர் நடப்பதால் மது போதையில் உள்ள நபர்களை கவனத்துடன் கையாளுவதுடன், போதையில் உள்ள சந்தேக நபர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் முடியும் வரை மனுதாரர்களை காவல் நிலையங்களுக்கு அழைக்காமல், போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments