கல்குட்டையில் “போட்டோ ஷூட்"... நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி

0 5979
கல்குட்டையில் “போட்டோ ஷூட்"... நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி

பத்தான கல்குட்டையை சுற்றுலாத் தலம் போல சித்தரித்து சிலர் இணையத்தில் பதிவேற்ற, அதனைப் பார்த்து அங்கு புகைப்படம் எடுக்கச் சென்று 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த ஆகாஷும், ஆவடியைச் சேர்ந்த தினேஷ்குமாரும் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு இணையத்தில் பலவகையான லொகேஷன்களைத் தேடி அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

அப்படி திரிசூலம் பகுதியிலுள்ள இந்தக் கல்குட்டை அவர்களது கண்களில் தென்பட்டிருக்கிறது. அதனை சுற்றுலாத் தலம் என எண்ணி, மற்றொரு நண்பனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றவர்கள், போட்டோஷூட்டின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

பல மணி நேரம் போராடி இருவரது உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், கல்குட்டையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments