மதுரை: ஆண்நண்பருடன் தொடர்பை கைவிடாததால், தாயை கொலை செய்த இளைஞர் கைது!

0 51138

தாயின் கள்ளத்தொடர்பால் ஆத்திரமடைந்த மகன் தாய் மீது அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்னளது.அ

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வஞ்சி மலர் . தற்போது 49 வயதான வஞ்சிமலர் சேகர் என்பவரை திருமணம் செய்த மூன்று ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஓம் சக்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து பிறகு, பல வருடங்களாக செல்லூர் பகுதியில் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது, கேட்டரிங் வேலைக்கு வஞ்சி சென்று வந்துள்ளார். கேட்டரிங் வேலைக்கு சென்ற இடத்தில் ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் அடிக்கடி தொலைபேசியில் தன் ஆண் நண்பருடன் வஞ்சி மலர் பேசி வந்துள்ளார். இதை கல்லூரியில் படிக்கும் மகன் ஓம்சக்தி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் , வஞ்சிமலர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தன் சொல்லை தாய் கேட்காததால் ஓம் சக்தி ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்றிரவும் வஞ்சிமலர் வழக்கம் போல் தன் ஆண் நண்பருடன் போனில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓம் சக்தி இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். பின்னர், மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்,

கல்லூரி மாணவர் ஓம் சக்தியை கைது செய்த காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த வஞ்சிமலரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments