சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு... அரசின் முறைகேடுகளுக்கு ஆளுநர் துணைபோவதாக குற்றச்சாட்டு

0 1441
தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசின் முறைகேடுகளுக்கு ஆளுநர் துணைபோவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின குற்றஞ்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.  தமிழக அரசின் முறைகேடுகளுக்கு ஆளுநர்  துணைபோவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின குற்றஞ்சாட்டினார்.

சட்டப்பேரவை கூடியதும் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற தொடங்கினார். அப்போது எழுந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மீது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட முறைகேடு புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். அத்தோடு ஏழு பேர் விடுதலை தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வினவினார்.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் முதலில் தான் உரையாற்றுவது தான் மரபு என்றும் பிரச்சனைகள் தொடர்பாக உரைக்கு பின்னர் சட்டப்பேரவையில் விவாதிக்கலாம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதிலளித்தார். ஆனால் ஆளுநருடன் திமுக எம்எல்ஏக்கள் சிலர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் தன்னுடன் வாதம் செய்வதால் பலன் இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் வெளிநடப்பு செய்யலாம் என்று ஆளுநர் கூறினார். இதனை அடுத்து ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக கூறிவிட்டு திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் முறைகேடுகளுக்கு ஆளுநர் துணைபோவதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments