திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பலை சினிமா பாணியில் 60 கி.மீ. தூரம் தூரத்தி சென்று பிடித்த போலீசார்

0 685
திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பலை சினிமா பாணியில் 60 கி.மீ. தூரம் தூரத்தி சென்று பிடித்த போலீசார்

திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பலை, ஆந்திர போலீசார் சினிமா பாணியில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று பிடித்தனர்.

திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த 3 காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர்.

அதில் ஒரு கார் நிற்காமல் சென்ற நிலையில், அந்த காரை துரத்தி சென்ற போலீசார் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கர்நாடக எல்லையோரம் உள்ள கோலாப்பூரில் அந்த காரை பிடித்தனர்.

அந்த காரை சோதனையிட்டதில் அதில் 14 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments