கொலையில் முடிந்த தகாத உறவு... கம்பிக்கு பின்னால் நிற்கும் குடும்பம்!

0 74342

நாமக்கல் அருகே இறைச்சிக்கடை உரிமையாளர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள கந்தம்பாளையம் மயானத்தில் கடந்த 28 ஆம் தேதி  ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  சடலத்தை கைப்பற்றிய பரமத்திவேலூர் காவல்துறையினர்  விசாரணை நடத்தினர். கொலையானவர் சோழசிராமணி பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது. 

தற்போது, 36 வயதான வயதான சரவணன் அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். சரவணனுக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.  சரவணனுக்கு செட்டியாம்பாளையத்தை சேர்ந்த கீதாவுடன் தகாத உறவு இருந்துள்ளது. கணவனை இழந்த  கீதா செட்டிபாளையத்தில் கூலிவேலை செய்து வருகிறார். கீதாவுக்கு  இளவரசன் என்ற 19 வயது மகனும் மற்றோரு மகளும் உண்டு.  இளவரசன் முதலாமாண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார் . மகளுக்கு திருமணமாகி கணவர் தமிழ்செல்வனுடன் ஆத்தூர் கூலமேடு பகுதியில் தனியே வசித்தார். 

தன் தாய், சரவணனுடன் தகாத உறவு வைத்திருப்பதை ஆரம்பம் முதலே இளவரசன் கண்டித்து வந்துள்ளார். இதனால்,  இளவரசனுக்கும் சரவணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு சரவணன், கீதாவின் வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ளார் . அப்போது, கீதாவிடத்தில் சரவணன் வாக்குவாதம் செய்துள்ளார்.  இந்த தகராறு குறித்து தன் மகன் இளவரசனிடத்தில் கூறி  கீதா  அழுதுள்ளார். 

ஆத்திரமடைந்த இளவரசன், சரவணனிடத்தில் இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.   வாய்த்தகராறு கை கலப்பாக மாற, கோபமடைந்த இளவரசன், சரவணனை  கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில்,  சரவணன் தலையில் பலத்த அடி பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனால், கீதாவும் இளவரசனும் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து, கீதா தன் மருமகன் தமிழ் செல்வனுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி அழைத்தார். 

இதனால், அதிர்ச்சியடைந்த  தமிழ் செல்வன் கீதாவின் வீட்டுக்கு தன் நண்பர் பிரபாகரனுடன் ஆம்னி வேனில்  சென்றுள்ளார். பின்னர், கீதா, இளவரசன், தமிழ்செல்வன், பிரபாகரன் ஆகிய  நான்கு பேரும் சேர்ந்து  சரவணனின் சடலத்தை ஒரு சாக்குப்பையில் கட்டி ஆம்னி வேனில் ஏற்றினர். பிறகு,  ஆம்னி வேனில்  கந்தம்பாளையத்திலுள்ள மயானத்துக்கு வந்து மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சரவணனின் சடலத்தை வீசி விட்டு சென்று விட்டு சென்றது தெரிய வந்தது. 

இந்த கொலை தொடர்பாக கீதா, இளவரசன், தமிழ்செல்வன், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்து  பரமத்திவேலூர் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதானவர்களை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து,  கீதாவை சேலம் மகளிர் சிறையிலும் இளவரசன் ,  தமிழ்ச்செல்வன்  பிரபாகரன் ராசிபுரம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

தாயின் தகாத உறவு காரணமாக மகனின் வாழ்க்கை பாழாகிப் போனதோடு, மருமகனும் சிறைக்கு பின்னால் அடைபட்டு கிடக்கிறார். ஆக, இப்போது குடும்பமே சிறை கம்பிகளுக்கு பின்னால் நிற்கிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments