பனி மூடிய சாலையால் ஆம்புலன்ஸ் வரவில்லை... பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு ராணுவ வாகனத்திலேயே சுகப்பிரசவம்!

0 2265

காஷ்மீரில் பனி மூடிய சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் பிரவச வலியில் துடித்த பெண்ணுக்கு ராணுவ வாகனத்தில் குழந்தை பிறந்தது.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள நாரிகூட் என்ற கிராமத்தில் பிரசவ வேதனையில் இருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அழைப்பு விடுத்தும் சாலைகள் பனி மூடிக் கிடந்ததால் ஆம்புலன்ஸ் வரவில்லை.

தகவல் அறிந்து, மருத்துவ குழுவுடன் ராணுவ வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த வாகனத்தில், ராணுவ மருத்துவ குழுவினரின் உதவியுடன்  பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments