மும்பையில் பலமாதங்களுக்குப் பிறகு புறநகர் மின்ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி

பல மாதங்களாக பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த மும்பையின் புறநகர் ரயில்களின் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
குறிப்பிட்ட நேரங்களில் அனைத்துப் பயணிகளும் பயணிக்க அனுமதி வழங்கி மகாராஷ்ட்ர அரசு உத்தரவிட்டது. ரயில்களை நம்பி வாழும் மும்பை நகர ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மீளும் என்பதுடன் ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், இதர சிறு தொழில்களும் பழைய நிலைக்குத் திரும்பின.
இதனிடையே ரயில்களில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களை போலீசார் பிடித்து 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.
Comments