சீனாவில் அமைந்துள்ள 168 மீட்டர் நீளமுள்ள கண்ணாடிப் பாலம்

சீனாவில் அமைந்துள்ள 168 மீட்டர் நீளமுள்ள கண்ணாடிப் பாலம்
தென்சீனாவில் guangdong மாகாணத்தில் Qingyuan பகுதியில் உலகின் மிக நீண்ட கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நீளம் 168 மீட்டர் ஆகும். அங்கு வருகிற 12ந்தேதி வசந்த திருவிழா ஆரம்பமாவதை ஒட்டி இந்த கண்ணாடி பாலத்தை அழகுபடுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த கண்ணாடி பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா காரணமாக களை இழந்து காணப்பட்ட சுற்றுலா பகுதிகள் எல்லாம் தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன.
Comments