OLX இணைய தளத்தில் கார் விற்பனை செய்வது போல் பண மோசடி செய்த நபர் கைது; தலைமறைவாக உள்ள மோசடி கும்பலுக்கு போலீசார் வலை

OLX இணைய தளத்தில் கார் விற்பனை செய்வது போல் பண மோசடி செய்த நபர் கைது; தலைமறைவாக உள்ள மோசடி கும்பலுக்கு போலீசார் வலை
OLX தளத்தில் கார் விற்பனை செய்வது போல் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜன், வேகன் ஆர் காரை வாங்குவதற்கு, விளம்பரம் கொடுத்திருந்த தீபக் என்பவரிடம் முன் தொகையாக 10 ஆயிரம் ரூபாயை கூகுள் பே கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
அதற்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் அதே கார் வேறொருவர் பெயரில் OLX -ல் விளம்பரப்படுத்தி இருந்ததை பார்த்து ராஜன், அவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் தான் உண்மையான கார் உரிமையாளர் என தெரியவந்தது.
ராஜன் பண பரிவர்த்தனை செய்த வங்கி கூகுள் பே எண்ணை வைத்து கோவையை சேர்ந்த நரேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
Comments