ஆந்திராவில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை 2 கி.மீ தூரம் சுமந்த பெண் போலீஸ் அதிகாரி..!

0 2392
ஆந்திராவில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை 2 கி.மீ தூரம் சுமந்த பெண் போலீஸ் அதிகாரி..!

யல்வெளியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் உடலை பெண் எஸ்.ஐ ஒருவர் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்த நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் அடவி கொத்தூர் என்ற கிராமத்திலுள்ள வயல்வெளியில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காசிபுக்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா, உடலை அப்புறப்படுத்த அங்கிருந்தவர்களை அழைத்துள்ளார்.

ஆனால் அவர்கள் யாரும் சடலத்தை தூக்க முன்வரவில்லை என்று கூறப்படும் நிலையில், தனது உதவியாளருடன் சேர்ந்து சிரிஷாவே, முதியவரின் சடலத்தை மயானப் பகுதிக்கு கொண்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments