மகனின் மரணத்துக்கு மருமகளின் கள்ளக் காதல்தான் காரணம் : மாமியார் பரபரப்பு குற்றச்சாட்டு

0 26631

 சேலம் அருகே நீர்முள்ளிக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். கார் ஓட்டுநனரான இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டார். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக மரணமடைந்தவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, தாசில்தார் முன்னிலையில் மீண்டும் பிணம் தோண்டியெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45வயதான வேல்முருகனுக்கு 35 வயதில் சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்களது இல்லற வாழ்க்கைக்கு அர்த்தமாக இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவள் 15வயதை எட்டியுள்ளாள். இளையவளுக்கு 13வயதாகிறது. அளவில்லா ஆனந்தத்தில் இந்த குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் போயுள்ளது.

ஆயினும் ஆனந்தக் குயில் பாடிய இந்த அழகான குடும்பத்தில் யாரும் எதிர்பாராத வேளையில், குடும்பத் தலைவரான வேல்முருகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டார். உறவினர்களைக் கொண்டு ஈமசடங்கும் உள்ளூரிலேயே நடைபெற்றது.

இந்நிலையில், தனது மகன் வேல்முருகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு அவனது மனைவியான எனது மருமகள் சங்கீதாவும் அவளுடைய கள்ளக் காதலனும்தான் காரணம் என்று தாயார் காவேரியும் அவரது உறவினர்களும் காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அப்புகாரில், மருமகள் சங்கீதாவும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து, வேல்முருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

இப்புகாரானது சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, காவல்துறை அதிகாரி தீபா கானி கேர், இறந்துபோன வேல்முருகனின் சடலத்தைப் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட வேல்முருகனின் சடலமானது, வாழப்பாடி தாசில்தார் ஜானகி முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போது, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமணனும் உடன் இருந்தார்.

வேல்முருகன் புதைக்கப்பட்ட இடத்திலேயே அவரது சடலத்தை சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலகண்ணன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார். இதனை கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. உடனே அங்கியிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தி, தங்கு தடங்கலின்றி பிரேத பரிசோதனை நடத்த உதவினர்.

பிரேத பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னரே உண்மை நிலை என்ன? யார் குற்றவாளி என்பது தெரியவரும். அதன் பிறகே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரிப்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமணன் தெரிவித்தார்.

மகனின் மரணத்துக்கு மருமகள் சங்கீதாதான் காரணம் என மாமியார் காவேரி கொடுத்த புகாரானது உயிர் பெறுமா? அல்லது மண்ணோடு மண்ணாக மக்கிப் போகுமா? என்பதை பிரேத பரிசோதனையின் முடிவுதான் தீர்மானிக்கும்.

“கணவனே கண்கண்ட தெய்வம்” என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே நடைபெறும் கள்ளக் காதலால் கசிந்துருகும் சில பெண்களால், குடும்பம் என்கிற குருவிக்கூடு சிதைந்து சின்னப்பின்னமாகி விடுகிறது என்பதுதான் அனுபவப்பூர்வமான உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments