திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதி..!

திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் பக்தர்கள் புனிதநீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள தீர்த்தத்தில் மிக முக்கியமானது ஸ்ரீவாரி புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளம். இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா பரவலால் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைப்படி, திருப்பதி கோவில் புஷ்கரணியில் இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments