இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

0 1350
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் ஐ பேடில் பட்ஜெட்டை வாசித்தார்.

நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments