பட்ஜெட் உரையை அலங்கரித்த திருக்குறள்கள்..!

பட்ஜெட் உரையை அலங்கரித்த திருக்குறள்கள்..!
மத்திய பட்ஜெட்டில் இரு திருக்குறள்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொள் காட்டினார்.
பட்ஜெட் உரையின் போது அவர், "நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு" என்று பொருள்படும் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
இதேபோல, இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளையும் அவர் மேற்கோள் காட்டினார்.
இந்த குறள்களை கூறியதுடன் அவற்றுக்கான பொருளையும் அவர் ஆங்கிலத்தில் எடுத்து கூறினார்.
Comments