பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

0 5678
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

மிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உடற்கல்வி, ஓவியம், இசை, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்ட பணிகளில் பகுதி நேரமாக 16 ஆயிரத்து 483 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும், இவர்களில் 12 ஆயிரத்து 483 ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மே மாதம் நீங்கலாக ஒவ்வொரு மாதமும் 7 ஆயிரத்து 700 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments