திருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது

0 1494
திருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது

திருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி கேரளாவுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்று ஏமாந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்னதான காக்கவாக்கம் என்ற ஊரில் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து 3 சிலைகள் கடந்த ஆண்டு அக்டோபரில் திருடுபோயின. நேற்றிரவு பெரியபாளையம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் சிக்கினர்.

விசாரணையில் அவர்கள்தான் சிலைகளை திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. அப்பகுதியில் நெல் அறுவடை பணிக்காக வந்தவர்கள், கோவில் சிலைகளை ஐம்பொன் சிலைகள் என நினைத்து திருடிச் சென்று கேரளாவில் விற்க முயன்றபோது அவை பித்தளை சிலைகள் என்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments