தமிழகத்திற்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

0 985
மத்திய பட்ஜெட், சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் பை கொடுத்திருக்கிறதே தவிர - அந்த “லாலிபாப்” உண்மையானது அல்ல, கைவரக் கூடியதல்ல என்பதை அதன் வாசகங்கள் நிரூபிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விவசாயிகள், வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள், தொழிலாளர்கள், ஏழை - எளிய நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயனில்லாத  பட்ஜெட் இது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிதி நிலை அறிக்கை - தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் - தாகத்தால் தவிக்கும் பசுவுக்குக் கானல் நீரைக் காட்டும் பட்ஜெட் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments