மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு உகந்த பலஅறிவிப்புகள்: மத்திய பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

0 2491
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு உகந்த பலஅறிவிப்புகள்: மத்திய பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

த்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு உகந்த பலஅறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் ஆகிய இரண்டு வழித்தடங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது தமிழ்நாட்டின் பொருளாதாரவளர்ச்சியை மேலும் தூண்டும் என அவர் கூறியுள்ளார்.

புதிய மெட்ரோலைட் மற்றும் மெட்ரோ நியோ திட்டங்களை கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் செயல்படுத்திட ஒப்புதல் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தென் மாவட்டங்களில் ஒரு ஜவுளிப் பூங்காவும், சேலம் மாவட்டத்தில் மற்றொரு ஜவுளிப் பூங்காவும் அமைக்கவேண்டும் என மத்தியஅரசிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆதி திராவிட மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தில், மாற்றங்களை செய்ததோடு, இத்திட்டத்திற்கான போதிய நிதிஒதுக்கீட்டை இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கியுள்ளது மனநிறைவை அளிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments