தாலிக்கயிற்றில் மாங்கல்யம் அணியாமல் இருக்கும் திருமணமான பெண்கள்..! வினோத நடைமுறையை கடைப்பிடிக்கும் காணாது கண்டான் கிராமப்பெண்கள்

0 2918
தாலிக்கயிற்றில் மாங்கல்யம் அணியாமல் இருக்கும் திருமணமான பெண்கள்..! வினோத நடைமுறையை கடைப்பிடிக்கும் காணாது கண்டான் கிராமப்பெண்கள்

டலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருமணமான பெண்கள் தாலிக்கயிற்றில் மாங்கல்யம் அணியாமல் வினோத நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர்.

காணாது கண்டான் கிராமத்தில் பெண்கள் திருமணத்திற்கு பின் தங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென வேண்டி மாங்கல்யத்தை கழட்டி விடுவதாகவும், ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாவின்போது அந்த மாங்கல்யத்தை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி விடுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த வழக்கத்தை பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வருவதோடு, எல்லையிலுள்ள பிடாரியம்மன் தங்களை காத்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments