குஜராத் மோட்டிரா மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 3ஆவது டெஸ்ட் போட்டியை காண பிரதமர் மோடிக்கு அழைப்பு என தகவல்

0 605
குஜராத் மோட்டிரா மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 3ஆவது டெஸ்ட் போட்டியை காண பிரதமர் மோடிக்கு அழைப்பு என தகவல்

குஜராத் மாநிலம் மோட்டிராவில் (Motera) உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் 3ஆம் டெஸ்ட் போட்டியை காண வருமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் அழைப்பு விடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து அணி வரும் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. முதல் இரண்டு டெஸ்டுகள் சென்னையில் நடக்க உள்ளன.

3 மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் பார்க்க கூடிய, மோட்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய இந்த மைதானத்தில் 50 சதிவிகிதம் என்ற அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்கலாமா எனவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் ஆலோசித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments