மத்திய பட்ஜெட் தாக்கல் - முழு விவரம்..!

0 15880
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முற்றுப்புள்ளி

பட்ஜெட்டை தெரிந்து கொள்ள செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பட்ஜெட்டை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்ற ஏற்பாடு

---------------------------------------------------

மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது - நிர்மலா சீதாராமன்

ரூ.27 லட்சம் கோடி அளவிற்கு ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் சலுகைகள் அறிவிக்கப்பட்டனimageபிரதமரின் தானியம் வழங்கும் திட்டம் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருந்தது

நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதம் அளவிற்கு 3 ஆத்மநிர்பார் திட்டங்களில் உதவிகள் அறிவிக்கப்பட்டன

இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன

கொரோனா காலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்தது

ஆத்மநிர்பார் திட்டங்கள் மூலமாக கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டதுimageஇந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது

இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன்

அனைத்து பெண்களும் கல்வி கற்று சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு பட்ஜெட்டுக்கு உள்ளது

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் 2021ம் ஆண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

நாட்டு மக்களின் உடல் நலனை உறுதிப்படுத்தும் சுகாதாரத்திட்டங்கள் தான் இந்த பட்ஜெட்டின் முதல் தூண்

ரூ.64,180 கோடியில் சுகாதாரத்துறையை மேம்படுத்த பிரதமரின் ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 9 இடங்களில் உயிரியல் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும், 4 இடங்களில் வைரஸ் ஆய்வகங்கள் அமைக்கப்படும்

ஸ்வஸ்த் யோஜானா திட்டம் - ரூ.64,180 கோடி ஒதுக்கீடு

imageதாங்களாக முன்வந்து பழைய வாகனங்களை கழித்துக்கட்டும் கொள்கை அறிமுகம் செய்யப்படும்

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் வாகனக்கழிவு கொள்கை அறிமுகம் செய்யப்படும்

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு ரூ.35000 கோடி ஒதுக்கீடு 

உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்க ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு

உற்பத்தியாளர்களுக்கு மானியம் - ரூ.1.97லட்சம் கோடி

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.5லட்சம் கோடி முதலீடு

அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 11000 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைத்து முடிக்கப்படும்

மும்பை - கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடம் அமைக்க திட்டம்

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத்திட்டங்களுக்கு ரூ.65ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த - விரிவுபடுத்த ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடுimageதமிழகத்தில் 3500 கிமீ அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த, விரிவுபடுத்த ரூ.1.03 லட்சம் கோடி

தமிழக நெடுஞ்சாலைகள் - ரூ.1.03லட்சம் கோடி

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் விரைவில் தொடங்கும்

2023ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து அகல ரயில்பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு

மாநகரங்களில் மெட்ரோ மற்றும் பேருந்து வழித்தடங்களை விரிவாக்க திட்டம்

பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த ரூ.18ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

image

கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.1957 கோடி ஒதுக்கீடு

பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.14ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.63ஆயிரம் கோடிimageசென்னை மெட்ரோ - ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மின்சாரத்துறைக்கு ரூ.3.05லட்சம் கோடி ஒதுக்கீடு

மின்விநியோகம் செய்யும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகம்

சென்னையில் 118கிமீ தொலைவிற்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தில் கூடுதலாக 100 மாவட்டங்கள் சேர்க்கப்படும்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மேலும் 1கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்

சுகாதாரத்துறைக்கு ரூ.2.23லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

காப்பீடு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு 74 சதவீதம் வரை அனுமதிக்கப்படும்

image

நகர்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு

image

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி வரை வழங்கப்படும்

எல்ஐசி நிறுவன பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு

இரண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து அடுத்த நிதி ஆண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு

விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை எவ்வித தடையும் இன்றி தொடரும்

image

விவசாயிகள் 1.5 மடங்கு கூடுதல் வருவாய் பெறுவதை குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும்

குறைந்தபட்ச ஆதார விலை மூலம் 43 லட்சம் விவசாயிகள் நேரடியாக பலன் பெறுகின்றனர்

குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் ரூ.1.72 லட்சம் கோடி அளவிற்கு விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்

நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பின் மூலம் ஒன்றரை கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்

2020-2021 நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.75ஆயிரம் கோடி உதவித் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது

நெல் கொள்முதலுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

விவசாயக்கடனாக ரூ.16.5 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது

விவசாயக் கடன் - ரூ.16.5 லட்சம் கோடி

image

சிறு நிறுவனங்களுக்கான மூலதனம் உச்சவரம்பு ரூ.2கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு

நுண்ணீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் - ரூ.10000 கோடி

தமிழகத்தில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய கடல் வாழ் உயிரினங்களுக்கான பூங்கா அமைக்கப்படும்

தமிழகத்தில் கடல்பூங்கா

சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடித்துறைமுகங்கள் மேம்படுத்தப்பட உள்ளது

சிறுகுறு தொழில்நிறுவனங்களுக்கு ரூ.15700 கோடி நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் 15ஆயிரம் பள்ளிக்கூடங்கள் நவீன வசதிகளுடன் வலுப்படுத்தப்படும்

நாடு முழுவதும் கூடுதலாக 100 சைனிக் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்

படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித்துறை ஆணையம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்

நாடு முழுவதும் 750 ஏகலைவன் மாடல் பள்ளிகள் அமைக்கப்படும்

இ-பேமென்ட் முறையை ஊக்கப்படுத்த ரூ.1500 கோடி ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.50ஆயிரம் கோடி ஒதுக்கீடு

டிஜிட்டல் வடிவ பேமெண்ட்டுகளை ஊக்கப்படுத்துவதற்கு ஊக்கத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்

எஸ்சி - எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்

2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்வெளியில் செலுத்தும்

image

டிஜிட்டல் வடிவத்தில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் - ரூ.3768 கோடி ஒதுக்கீடு

செவிலியர்களின் நலனை காக்க தேசிய செவிலியர் நலச்சட்டம் கொண்டுவரப்படும்

பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.80ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

புறநகர் பொதுப்போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.18000 கோடி ஒதுக்கீடு

மாநகரங்களில் காற்று மாசை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.2200 கோடி ஒதுக்கீடு

வேளாண் பொருட்களை ஆன்லைன் சந்தைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தில் சுமார் 1.68கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்

திருக்குறளை சுட்டிக்காட்டி பட்ஜெட்டில் வரி விதிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் நிர்மலா சீதாராமன்

image

உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக வசூலிக்கப்படுகிறது

பென்சன் மட்டும் பெறும் 75வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை

image

நாடு முழுவதும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்துள்ளது

வரித்தணிக்கை வரம்பு 5கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்வு

வருமான வரி தொடர்பான சிறிய அளவிலான பிரச்சனைகளை தீர்க்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்

குறைந்த விலை வீடுகளுக்கான வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்

ஜிஎஸ்டி முறையை மேலும் எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

பிப்ரவரி மாத செலவுகளை பூர்த்தி செய்ய ரூ.80ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு

வெளிநாடு வாழ் இந்தியர்களை பாதிக்கும் இரட்டை வரி விதிப்பு முறையை சரி செய்ய நடவடிக்கை

வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

தங்கத்தின் மீதான சுங்கவரி 10 சதவீதமாக குறைப்பு

பருத்தி மீதான சுங்கவரி 10சதவீதமாக அதிகரிப்பு

சோலார் இன்வெர்ட்டர்கள் மீதான சுங்க வரி அதிகரிப்பு

தங்கம் - சுங்கவரி அதிகரிப்பு

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு மாற்றம் இல்லாமல் தொடர்கிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments