சென்னையில் இருசக்கரவாகனம், செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது - 5 இருசக்கர வாகனங்கள், 8 செல்போன்கள் பறிமுதல்

0 1293
சென்னையில் இருசக்கரவாகனம், செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது - 5 இருசக்கர வாகனங்கள், 8 செல்போன்கள் பறிமுதல்

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

கொடுங்கையூரில் ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது நிற்காமல் சென்ற வாகனத்தைப் பிடித்து விசாரித்த போலீசார் 17 வயது சிறுவனும் பரத்குமார் எனும் இளைஞனும் பல நாட்களாக இத்திருட்டில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர்.

ஏற்கனவே சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இவர்களைத் தேடி வந்த போலீசார் இருவரையும் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments