கரூரில் மனைவியின் கள்ளக்காதலன் கொடூர கொலை, கணவர் மற்றும் அவரது நண்பர் கைது..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
லாலாப்பேட்டை சந்தை மேல் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கும், மகாதானபுரம் சேர்ந்த தர்மதுரை என்பவரின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தர்மதுரைக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கதிர்வேல் வீட்டிற்கு சென்ற தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் ஆகியோர் அவரை தனியாக பேசவேண்டும் என்று கூறி பிள்ளபாளையம் வாய்க்கால் அருகே அழைத்து சென்று உடல்பாகங்களை வெட்டிக் கொலை செய்தனர்.
Comments