தெலங்கானா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.10 கோடி பறிமுதல்

0 7630

தெலங்கானா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணா மாவட்டம் கோட்டா என்ற இடத்தில் இருந்து விஜயவாடாவுக்கு சென்ற பேருந்தை நடுவழியில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒருவர் எடுத்துச் சென்ற பையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

நிலங்களை விற்று பணத்தை எடுத்துச் செல்வதாக பணத்தின் உரிமையாளர் தெரிவித்த போதிலும், முறையான ஆவணங்கள் இல்லாததால் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments