பிலிப்பைன்சில் கோவாக்சின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்

பிலிப்பைன்சில் கோவாக்சின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கோவாக்சின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கோவாக்சின் மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அதனை சர்வதேச சந்தையில் நிலைநிறுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கிழக்காசிய நாடுகளில் சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிலிப்பைன்சுக்கான இந்தியத் தூதர் சாம்பு குமரன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து சர்வதேச சந்தையில் களமிறங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்நிகழ்வு பசிபிக் பிராந்தியத்தில் முக்கியமான மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments