சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

0 1661
சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த  எட்டு பேர் பெங்களூருவிலுள்ள ஒன்டர்லா சுற்றுலாத் தலத்திற்கு ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே ஆம்னி வேன் வந்துகொண்டிருந்த நிலையில், முன்னால் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து இறங்கிய ஜெயராஜ் என்பவர் சாலையில் வாகனம் வருவதை பார்க்காமல் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சாலையின் குறுக்கே வந்த ஜெயராஜ் மீது மோதிய ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் ஜெயராஜ், ஆம்னி வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments