மேற்கு வங்கத்தில் தேர்தலின் போது மம்தா தனித்து விடப்படுவார் - அமித்ஷா பேச்சு

மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் ஆட்சியை விட மம்தாவின் ஆட்சி மோசமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
ஹவுராவில் பாஜக தொழிலாளர் அணி நிர்வாகிகளிடையே காணொலி மூலம் பேசிய அவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்து வருவதாகவும், தேர்தல் நேரத்தில் மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவை என்ற நிலையை விட்டு, மருமகன் நலனுக்காக மம்தா பாடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஊழல் மற்றும் மிரட்டிப் பணம் பறிப்பதில் குறியாக இருப்பதாகவும் அமித்ஷா பேசினார்.
Comments