இந்திய கடலோர பொருளாதார மண்டலத்துக்குள் கடந்த ஆண்டில் ரூ.1500 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல்

இந்திய கடலோர பொருளாதார மண்டலத்துக்குள் கடந்த ஆண்டில் ரூ.1500 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல்
இந்திய கடலோர பொருளாதார மண்டலத்துக்குள் கடந்த ஆண்டில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கடலோர காவல்படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடலோரத்தில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரை உள்ள பகுதி, பிரத்யேக பொருளாதார மண்டலமாக கருதப்படுவதாகவும், இந்த மண்டலத்துக்குள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது, கடலோர காவல் படையின் பொறுப்பு ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சட்டவிரோதமாக சுற்றிய 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகளையும், 80 குற்றவாளிகளையும் பிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments