8ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; 65 வயது நபர் போக்சோவில் கைது..!

0 2834

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

பெரியூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவன் ஒகேனக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ளான். அப்போது வனப்பகுதியை ஒட்டிய வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments