சாதகமான சூழ்நிலை வரும் வரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

சாதகமான சூழ்நிலை வரும் வரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு
தங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகாதவரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூட்டாசிங் புர்ஜ் கில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்பதாக குறிப்பிட்டார்.
இது இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நல்ல முன்னோட்டம் எனக் குறிப்பிட்ட அவர், இணைய சேவை துண்டிப்பு, பாதுகாப்பு அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களால் அரசுதான் நிலைமையை மோசமாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
எனவே உகந்த சூழலை உருவாகும் வரையில் பேச்சுவார்த்தை நடப்பது கடினம் எனவும் பூட்டா சிங் தெரிவித்துள்ளார்.
Comments