சாலையில் உருண்டோடிய பந்தை எடுக்க ஓடிய 2 வயது சிறுவன்... துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

0 12763
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய பந்தை எடுக்க ஓடிய 2 வயது சிறுவன் வாகனங்களில் சிக்காமல் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய பந்தை எடுக்க ஓடிய 2 வயது சிறுவன் வாகனங்களில் சிக்காமல் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெய்யாற்றின்கரையிலுள்ள சைக்கிள் ஷோரும் ஒன்றில் 2 மகன்களுடன் ஒரு தம்பதி சைக்கிள் வாங்க வந்துள்ளனர். பெற்றோர் சைக்கிள்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் சிறுவர்கள் இருவரும் பந்து ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது பந்து திடீரென உருண்டு நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையைக் கடந்து ஓடியது. பந்தை பின் தொடர்ந்து சாலையைக் கடந்து ஓடிய தம்பதியின் 2 வயது மகன், தடுமாறி கீழே விழுந்தான். அப்போது அவ்வழியாக வந்த கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் குழந்தை தப்பியது.

“இளங்கன்று பயமறியாது” என்ற கூற்றுக்கு ஏற்ப அரங்கேறியுள்ள இந்த சம்பவம், சிறு குழந்தைகள் மீது பெற்றோர் கூடுதல் கண்காணிப்பை செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments