கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஊகான் சந்தையை பார்வையிட்ட உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஊகான் கடல் உணவு சந்தையை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.
கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஊகான் கடல் உணவு சந்தையை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.
உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா வைரஸின் பாதிப்பு முதன் முதலாக சீனாவின் ஊகான் நகரில் கண்டறியப்பட்டது. இது குறித்த தகவல்களை சீனா திட்டமிட்டு மறைத்து விட்டதாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.
இதையடுத்து, பலத்த எதிர்ப்புக்கு பின் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் ஊகான் சந்தையை பார்வையிட சீனா அனுமதித்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ஊகான் சந்தையில், விஞ்ஞானிகள் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர்.
Comments