துக்க வீட்டுக்கு வந்த நபர் கடைகளை அடைக்கச் சொல்லி ரகளை... போலீசில் சிக்கியதும் மன்னிப்பு கேட்ட கும்பல்
காஞ்சிபுரத்தில் துக்க நிகழ்வுக்கு வந்த நபர் “நானும் ரௌடிதான்” என்கிற தொனியில் அங்கிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரத்தில் துக்க நிகழ்வுக்கு வந்த நபர் “நானும் ரௌடிதான்” என்கிற தொனியில் அங்கிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுராந்தோட்டம் பகுதியில் துக்க நிகழ்வுக்கு வந்த முருகன் என்ற நபர், கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு அங்கிருந்த கடைகளை அடைக்க கட்டாயப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் சிலரை முருகன் தாக்கிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
இந்த விவகாரம் காவல் நிலையம் சென்ற நிலையில், முருகன் மன்னிப்பு கேட்டதால், கடை உரிமையாளர்கள் புகாரளிக்காமல் சமாதானமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Comments