அனைவருக்குமான அதிமுக அரசு.! முதலமைச்சர் திட்டவட்டம்.!

0 4046
ஆளும் அதிமுக அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசாக விளங்குகிறது என்றும், விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் வாழ்வுரிமை மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழாவில் பேசிய முதலமைச்சர், வேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்திவருகிறோம் என்றும் குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாக்காமல் தடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா என்று கூறிய முதலமைச்சர், திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். சிறு-குறு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை ஆளும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தனது பேச்சில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments