8கே உயர்தர வீடியோ காட்சி வடிவத்தை சோதனை முயற்சியாக ஒளிபரப்பு செய்ய சீன ஊடகக் குழுமம் திட்டம்..!

8கே உயர்தர வீடியோ காட்சி வடிவத்தை சோதனை முயற்சியாக ஒளிபரப்பு செய்ய சீன ஊடகக் குழுமம் திட்டம்..!
சீனாவில் 8k Ultra high definition எனப்படும் உயர்தர வீடியோ காட்சி வடிவத்தை சோதனை முயற்சியாக ஒளிபரப்பு செய்ய சீன ஊடகக் குழுமம் முடிவு செய்துள்ளது.
காட்சியை படம் பிடிப்பது, தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது என பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்த சோதனை முயற்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வழிகாட்டியாக இது இருக்கும் என்றும் சீன ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது.
சீனாவின் 9 முக்கிய நகரங்களில் உள்ள 30 பெரிய அளவிலான திரை மானிட்டர்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments